News Just In

2/06/2022 09:17:00 PM

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு


எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 3 ரூபாவினாலும் 92 ஒக்டெய்ன் வகை பெற்றோல் லீட்டரொன்றின் விலையை 7 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் புதிய விலை 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த விலை அதிகரிப்பானது இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: