News Just In

2/23/2022 06:03:00 AM

ஏறாவூரில் கடை முதலாளி ஒருவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பலசரக்கு கடை ஒன்றில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கடை முதலாளி ஒருவர் நேற்று (21) இரவு ஆயிரத்து 700 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார இதனை தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்று இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஏறாவூர் முதலாம் பிரிவு கலைமகள் வித்தியாலய வீதியிலுள்ள குறித்த பலசரக்கு கடையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கடை முதலாளி தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஆயிரத்து 700 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 53 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக கடையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரை ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ;.

No comments: