(சர்ஜுன் லாபீர்)
அது மேதகு ஜனாதிபதியின் கம சமக பிலிசந்தர கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் அமல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(5) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுல் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு முன்னுரிமை அடிப்படையில் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இவ் வருட முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்களின் செயற்பட்டு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தி மக்களுக்கு அதின் பயன்பாட்டினை மிக விரைவாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களாம ஏ.எல்.ஏ.நஜிபர்,எம்.நியாஸ் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ.பாவா,இணைப்பு செயலாளர் சப்றாஸ் நிலாம் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: