News Just In

2/07/2022 07:14:00 PM

15 நாட்களாக தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை (07) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி வாழைச்சேனை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் - மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள இவர், 15 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றதாகவும், அவரை தேடி வந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

வயலில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: