News Just In

1/27/2022 06:57:00 PM

தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

கொவிட் தொற்றுறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், 7ஆவது நாள் நிறைவின் போது, இறுதி 48 மணித்தியாலங்களில் மருந்து எதனையும் உட்கொள்ளாமல் காய்ச்சலில் இருந்து விடுப்பட்டிருந்தால் பிசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை இன்றி தனிமைப்படுத்தலில் இருந்து விடுபட முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளரின் முதல் தொடர்பாளர், முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்து, கொவிட் அறிகுறிகள் எதனையும் கொண்டிராத பட்சத்தில், அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் (முதல் தொடர்பாளர்) பணிபுரியும் நபராக இருந்தால், தொடர்ந்தும் பணிகளை முன்னெடுத்து செல்ல முடியும்.

எனினும் அவருக்கு கொவிட் அறிகுறிகள் வெளிப்படுமாயில் அவர் கட்டாயமாக கொவிட் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments: