News Just In

1/24/2022 01:02:00 PM

எஸ்.எம். சபீஸினால் கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் மேம்பாட்டுக்காக நிதியுதவி !



நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான "கிழக்கின் கேடயம்" செயற்பாட்டாளர் எஸ்.எம். சபீஸினால் கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையத்தின் மேம்பாட்டுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை வின்னர்ஸ் இந் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான ஆசிரியர் யூ.எல்.எம். ஹிலாலின் வேண்டுகோளுக்கிணங்க வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானத்தில் வைத்து இந்த உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய "கிழக்கின் கேடயம்" செயற்பாட்டாளர் எஸ்.எம். சபீஸ், அன்றாட வேலைப்பளுக்கள் மற்றும் நேரமின்மை காரணமாக நாம் உடற்பயிற்சி செய்வது குறைவாகத்தான் உள்ளது. இவ்வாறான விளையாட்டு அரங்குகள் சுகாதாரத்தை மேம்படுத்த அவசியமான தொன்றாகும். இன்றைய காலகட்டத்தில் பலர் பல்வேறு வகையான தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் பூப்பந்தாட்ட விளையாட்டு துறையினை மேம்படுத்தும் நோக்கில் மட்டுமல்லாம், உடற்பயிற்சியினையும் உடல் ஆரோக்கியத்திற்கு வழியமைக்கும் வகையில் இவ் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் இருப்பதையிட்டு இந்த நல்ல செயற்திட்டத்தை வரவேற்பதுடன் பூப்பந்தாட்ட விளையாட்டு மூலம் உடல் செம்மையை சீராக வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

மேலும் இளைஞர்கள் இந்த பூப்பந்தாட்ட விளையாட்டின் மூலம் தம்மிடையே காணப்படும் திறனை விருத்தி செய்யும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் திறைமைகளை வெளிக் கொண்டு வர முடிவதுடன் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இடம்பெறும் பூப்பந்தாட்ட போட்டியில் பிரகாசிக்கக்கூடிய நிலை உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் கல்முனை வின்னர்ஸ் பூப்பந்தாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பு நிலையஉத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


No comments: