மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் டெப் கணினி நிலையம் புதன்கிழமை 26 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு டெப் கணினிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அவ்வாறு வழங்கப்பட்ட டெப் கணினிகளை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பயன்படுத்தவே இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் எம்.ஐ.ஆர். பஸீனா, பிரதி அதிபர் எஸ்.பாறூக்கான், கணினி நிலைய பொறுப்பாசிரியர் எம்.பீ.எம்.அன்வர் உட்பட ஆசிரியர்கள் மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: