News Just In

1/15/2022 06:18:00 PM

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும். இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் கட்டணம் செலுத்தும் கருமபீடங்களுடன், ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதி, தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: