மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய இலக்கிய விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெவ்வாய்கிழமை (14.12.2021) நடைபெற்றது.
பிரதேச கலாசார உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிகர் சுதர்சினி சிறிகாந், தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதசி ஆணையாளர் கோ.பவதாரிணி, பிரதேச செயலக உதசித் திட்மிடல் பணிப்பாளர் அ.கருணாகரன், கணக்காளர் ரே.டிலானி, நிருவாக உத்தியோகத்தர் ந.கோமதி, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் போது “புதிய மழை” எனும் சிறப்பு நூல் வெளியீட்டுவைக்கபட்டதுடன் பிரதேசத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: