News Just In

12/03/2021 07:22:00 PM

பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல் தொடர்பாக பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி!

ஜேர்மன் ஹோப்ரேஷன் மற்றும் பிளான் இன்டநெஷனல் நிறுவனங்களின் நிதிப் பங்களிப்பில் பெரண்டினா அபிவிருத்திச் சேவை நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் 'இலங்கை சமூக அமைப்புகளிலுள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களை கிராமிய தொழில் முயற்சியாண்மையில் வலுப்படுத்தல்' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'பெண்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தல் தொடர்பாக பயிற்றுவிப்பாளர்களுக்காக பயிற்சி அம்பாறை ரன்வீம தனியார் ஹோட்டலில் இடம் பெற்றது.

பெரண்டினா நிறுவனத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜாவின் தலைமையில் பெரண்டினா நிறுவனத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்பு, மதிப்பீடு உத்தியோகத்தகர் சுவாஜினி ராஜனின் ஒருங்கிணைப்பில்
நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்விரண்டு நாள் பயிற்சி வகுப்பிற்கு பால்னிலை தொடர்பான விஷேட வளவாளர் சிறியானி பெரேரா கலந்து கொண்டு பால்நிலை பற்றிய எண்ணக்கருக்கள், பெண்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான சட்டகம், பெண்களின் தொழில் முயற்சியாண்மை, கிராமிய தொழில் முயற்சிகளில் வலுவான பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறிகாட்டிகள் எனும் தலைப்பில் பயிற்சிகள் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், பெரண்டினா நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முகாமையாளர் எஸ்.டி.என்.மதுசங்க, பெரண்டினா நிறுவனத்தின் அம்பாறை அலுவலக திட்ட உத்தியோகத்தர் இதய குமார், நிர்வாக உத்தியோகத்தர் காதி அஹமட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

(றாசிக் நபாயிஸ்)











No comments: