வவுணதீவில் அமைந்துள்ள மண்முனை மேற்கு பிரதேச சபையின் முன்னால் இன்று புதன்கிழமை(01) தமக்கு வழங்கப்பட்ட தற்காலிக, அமைய அடிப்படையிலான நியமனத்தை நிரந்தரமாக்குமாறு ஆர்ப்பாட்ட ம் ஒன்று இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச சபையில் 24 ஊழியர்கள் கடந்த 6 வருடகாலமாக நிரந்தர நியமனம் வழங்காமல் தற்காலிகமாக கடடையாற்றி வருகின்றனர் எனவே தமது நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு கிழக்கு மாகாண ஆளுனர், பிரமதம், மற்றும் ஜனாதிபதி ஆகியோ முன்றவர வேண்டும் எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கால நீட்டிப்பு வேண்டாம், எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும், இந்த அரசை நாம் நம்புகிறோம், இது எங்களது நியாயமான கோரிக்கை, கால நீட்டிப்பு வேண்டாம், எங்களுக்கான நிரந்தர நியமனத்தை தாருங்கள் '
உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் தமக்கு நிரந்தர நியமனம் பெற்று தருமாறு கோரி மண்முனை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சண்முகராஜாவிடம் மகஜர் ஒன்றும் சமர்ப்பித்தனர்.
இந்த மகஜர் வழங்கும் நேரத்தில் பிரதேச சபை பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: