News Just In

12/13/2021 02:05:00 PM

இராஜாங்க அமைச்சரின் தம்பியும் இணைந்தே எனது மகனை சுட்டு கொலை செய்தனர்


இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாலசுந்தரத்தின் கொலையை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,எனது மகனை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரனும் சேர்ந்தே அடித்துக் கொன்றான் என படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இன்றைய வழக்கில் எனது மகன் பாவித்த கைத் தொலைபேசியை கேட்டுள்ளனர். போன் எங்களிடம் இல்லை ஆனால் கைத் தொலைபேசியின் சிம் கார்டுகள் இரண்டில் ஒரு சிம் கார்ட் மட்டுமே உள்ளது.கொலை நடந்த அன்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பியான மயூரன் என்பவரும் கூடவே இருந்துள்ளார். அவர் கறுத்த பிக்கப்பில் வந்து நின்றுள்ளார். அவருடன் அவரது மனைவி, பிள்ளைகள், இராஜாங்க அமைச்சரின் மனைவி பிள்ளைகள், மாமியார் என எல்லோரும் நின்றுள்ளனர்.

11 பேர் சேர்ந்து அடித்தும் வெடி வைத்தும் எனது மகனை கொலை செய்ததாக கேள்விப்படுகிறோம். மண் போமிட் எடுத்து தாரன் என்று காசையும் வாங்கிப்போட்டு என் மகனை சுட்டு கொலை செய்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சுற்றி இருந்த கமரா ஒன்று கூட வேலை செய்யாமலா இருந்தது. எல்லா கமராவில் இருந்ததையும் அழித்து விட்டார்கள். மண் போமிட்டுக்காகவே எனது மகனை சுட்டு கொலை செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். குறித்த வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 27ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments: