News Just In

12/14/2021 10:10:00 AM

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!


இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

GMT நேரப்படி 0320 மணிக்கு புளோரஸ் கடலில் 18.5 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் Maumere நகருக்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இந்தோனேசியாவில் 2004ம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது. இதன்போது ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: