News Just In

12/25/2021 03:50:00 PM

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு




எஸ்.எம்.எம்.முர்ஷித்
உலக கராத்தே கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட கராத்தே சுற்று போட்டியில் ஓட்டமாவடி தேசியப் பாடசாலையின் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கராத்தே பயிற்;றுவிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.நவாஸ் மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்;றுவிப்பாளர் கணேசன் ஜய்லராஜ்; ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சர்வதேச கராத்தே போட்டியில் 12 தொடக்கம் 15 வயது வரை இடம்பெற்ற போட்டியில் 1ம், 2ம் மற்றும் 3ம் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.


அந்தவகையில் 12 மற்றும் 13 வயது அடிப்படையில் ஆண் போட்டியாளரான ரீ.எம்.நப்லான் முதலாம்இடத்தினையும் , 14 மற்;றும் 15 வயது போட்டியில்;; எம்.எம்.அர்ஹான் முதலாம்  இடத்தினையும்;, எஸ்.எல்.அஸ்ஜத் இரண்டாம் இடத்தினையும், எச்.எம்.அப்துல்லாஹ் மூன்றாம் இடத்தினையும், 16 மற்றும் 17 வயது அடிப்படையில் ஏ.எச்.எம்.அஸாத் மூன்றாம் இடத்தினையும் பெற்று எமது நாட்டுக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.

கராத்தே பயிற்சியை வழங்கி தயார்படுத்திய பாடசாலையின் கராத்தே பயிற்றுவிப்பாளர் மௌலவிஏ.ஆர்.நவாஸ் மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கனேசன் ஜய்லராஜ்;, முன்னாள் கராத்தே ஒழுங்கு அமைப்பாளர் எஸ்.எல்.எச்.முஹம்மது இனாமுல்லாஹ் ஆகியோருக்கும் பாடசாலை கராத்தே குழுவினருனக்கும், பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக பராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.








No comments: