News Just In

12/19/2021 06:31:00 AM

இதயங்களை ஒன்றினைக்கும் கிராமிய பாலம் திறந்துவைப்பு!

அரசாங்கத்தின் சுபிட்ஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக இதயங்களை ஒன்றிணைக்கும் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுதலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூரில் 02 பாலங்கள் (கிராம நீதிமன்ற 1ம் பாலம், முனையாளவு பாலம்) அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எஸ்.எம் நளீம், பிரதித்தவிசாளர் எம்.எல்.ரெபுபாசம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் கோகுலன், லதாகரன் மற்றும் முன்னாள் நகரசபை தவிசாளர்களான எம்.ஐ தஸ்லிம், எம்.சி கபூர் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான எம். நசீர் மற்றும் ஊர் பிரதிநிதிகள் உலமாக்கள், ஆதாரவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.எச்.ஹுஸைன்









No comments: