News Just In

12/23/2021 06:38:00 AM

"கிராமத்துடன் கலந்துரையாடல்" : அக்கரைப்பற்றில் அதாஉல்லாவின் பங்கெடுப்புடன் நடைபெற்றது!

அரசாங்கத்தினால் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "கிராமத்துடன் கலந்துரையாடல்" எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மற்றும் பிரதேச மட்ட உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிவில் நிர்வாக குழுக்களுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடலொன்று நேற்று (22) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் (நளீமி)யின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல்.எம். அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாவுல்லாஹ் அஹமட் சகி , அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் போது அரசாங்கத்தினால் 2022ம் ஆண்டிற்கான பாதீட்டில் முன் மொழியப்பட்டுள்ள கிராமங்களை கட்டியெழுப்பும் நோக்கிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும், அதன் எண்ணக்கருக்கள், கிராம பிரதேசங்களில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர்







No comments: