News Just In

12/16/2021 12:38:00 PM

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கான விண்ணப்பம் கோரல்!



எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: