News Just In

12/08/2021 08:03:00 PM

மட்டக்களப்பில் கலைஞர் சுவதம் வேலை திட்டத்தின் கீழ் 140 கலைஞர்கள் கௌரவிப்பு!

இலங்கை கலைத்துறைக்கு போசனைக்காகவும் மற்றும் அபிவிருத்திக்காகவும் தங்களின் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பிரதேச செயலக மட்டத்தில் பரந்து இருக்கும் மூத்த கலைஞர்களை சுக நலம் விசாரிக்கும் நோக்குடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலைஞர் சுவதம் எனும் வேலைத் திட்டத்தை வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமது பிரதேச மட்டத்தில் கலாசாரத்திற்கும் மற்றும் கலைக்கும் உன்னத அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மூத்த வயோதிப கலைஞர்கள் குறைந்த பட்சம் பத்து (10) கலைஞர்களை இனம் கண்டு அவர்களது வீடுகளிற்கு சென்று அவர்களின் சுக நலன்களை விசாரித்து அவர்களுடன் கலந்துரையாடுவது மூலம் அவர்கள் தேசிய கலைக்கு ஆற்றிய பங்களிப்புகளை கௌரவப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வருடா வருடம் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இச் செயல் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது . ஒரு பிரதேச செயலகத்தில் குறைந்த பட்சம் பத்து கலைஞர்கள் வீதம் தெரிவு செய்து இவ் வேலை திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக ஒரு பிரதேச செயலகத்திற்காக ரூபா 30000 ம் வீதம் நிதி ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது . இதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் மேற்படி திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றதுடன் இதற்காக 252000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச் செயற்திட்டம் பிரதேச செயலாளர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் பிரதேச கலாசார உத்தியோகத்தர்களினால் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.எச்.ஹுஸைன்












No comments: