News Just In

12/10/2021 06:45:00 PM

மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு , செலவுத் திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகரசபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு , செலவுத் திட்ட பாதீடு 10 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற சபை அமர்வில் வரவு , செலவுத் திட்டம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பாதீட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் வழங்கப்பட்டது. ஒருவர் நடுநிலை வகிக்க மற்றவர் சபைக்கு பிரசன்னமாகவில்லை.

இது இந்த சபையின் நான்காவது வரவு செலவுத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 






No comments: