News Just In

11/25/2021 09:19:00 PM

இளைஞர்களை வழிப்படுத்தினால் சமுதாயங்கள் சிறந்த எதிர்காலத்தை அடைந்து கொள்ளலாம் : அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆர். தவசீலன்

இளைஞர்களை வழிப்படுத்தினால் சமுதாயங்கள் சிறந்த எதிர்காலத்தை அடைந்து கொள்ளலாம் என அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆர். தவசீலன் தெரிவித்தார்.

சமூக உணர்ச்சிக் கற்றல் பாடத்திட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நெறி மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டத்தில் இன்று வியாழக்கிழமை 25.11.2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் அனுலா அன்ரன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் இளைஞர் சேவை அலுவலர்கள் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாதர் சங்க அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 20 இற்கு மேற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவன தலைமை நிறைவேற்று அதிகாரி தவசீலன் எமது நிறுவனம் சிறுவர்களோடும் இளைஞர்களோடும் இணைந்து பணியாற்றி வருகின்றது.

இளைஞர்களின் எதிர்கால வாழ்வோடு அக்கறை கொண்டதாக எமது பணிகள் பரந்துபட்டிருக்கின்றன.

காலத்திற்கு ஏற்றதொரு விடயமாக இந்தப் பயிற்சி நெறியைக் கருத் முடியும் சமகாலத்தில் எழுகின்ற சமூகப் பிரச்சினைகள் குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறான கண்ணோட்டத்தில் ஏனைய சமூகப் பிரதிநிதிகளால் பார்க்கப்படுகின்றார்கள் என்பதோடு இளைஞர்களையும் இளைஞர்கள் சார்ந்த சமுதாயத்தையும் வழிப்படுத்துகின்ற வகையிலே இந்த வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டக் காரியாலய உதவிப் பணிப்பாளர் யூ.எல். அப்துல் மஜீத் மட்டக்களப்பு உளவளத்துறை அமைப்பின் பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் ரீ. குணரெட்ணம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத் திட்டத்திற்கு சிறுவர் நிதியம் மற்றும் உணர்ச்சி நுண்ணறிவு வாழ்க்கைத்திறன் பயிற்சி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றன.

இளைஞர்களின் சமூகப் பங்கேற்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சமூக உணர்ச்சிக் கற்றல் பாடத்திட்டத்தில் சமூகத்தின் தேவை மற்றும் நேர்மறையான மாற்றத்திற்காக வித்திடப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குதல் ஒட்டுமொத்த நிகழ்ச்சித் திட்டக் குறிக்கோளாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

மேலும் இந்த நோக்கங்களை அடைவதற்காக ஆரோக்கியமான குழந்தைப் பருவம் எண்ணறிவு எழுத்தறிவை வளர்த்தல் கட்டிளமைப் பருவ இளையோரின் வாழ்க்கைத் தர அப்விருத்திச் செயற்பாடுகள் தொழில் துறைக் கல்வியினூடாக ஊழல்களற்ற தொழில் திறன் விருத்தி மறு உற்பத்திச் சுகாதாரம் சமூக ஈடுபாட்டை ஊக்குவித்து விருத்தி செய்தல் என்பன அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமகால இளைஞர்கள் உணர்ச்சிகளைக் கையாளும் விதம் கட்டுமீறச் செல்கின்ற நிலைமையை மேலாண்மை செய்வதும் இந்தப் பயிற்சி நெறியின் பிரதான நோக்கங்களில் ஒன்று எனவும் அனுலா மேலும் தெரிவித்தார்.

.எச்.ஹுஸைன்










No comments: