News Just In

11/30/2021 06:58:00 AM

எந்த நேரத்திலும் நாடு மீண்டும் முடக்கப்படலாம் : சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்

நாட்டில் கோவிட் பரவரல் அதிகரித்து வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுவதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. எந்த நேரத்திலும் முடக்கம் அமுல்படுத்தப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இருப்பினும், முடக்கலை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் பலரும் எதிர்பார்க்காத வகையில் பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், முடக்கம் தேவையா இல்லையா என்பதை இறுதியில் பொது நடத்தை தீர்மானிக்கும் என்று ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில வாரங்களாக பொதுமக்களின் நடத்தை காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

பண்டிகைக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தவறினால், ஜனவரியில் கடுமையான நிலைமை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: