அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுத்துநிறுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.
இருப்பினும் அதன் அடக்குமுறைகள் அனைத்தையும் கடந்து இந்தியாவின் புதுடில்லி விவசாயிகளால் சுற்றிவளைக்கப்பட்டதைப்போன்று, எதிர்வரும் செவ்வாய்கிழமை பெருந்தொகையான மக்களால் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி எதிர்வரும் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு ஹைட்பார்க் மைதானத்திற்கு வருகைதருமாறு நாட்டுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்திருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, அம்மைதானத்திற்குள் நுழைவது தடைசெய்யப்படுமேயானால், ஒட்டுமொத்த கொழும்பு மாநகரமும் ஹைட்பார்க் மைதானமாக மாற்றப்படும் என்றும் எச்சரித்திருக்கின்றது.
No comments: