News Just In

11/13/2021 07:05:00 PM

சர்வதேசத்தில் சக்திமிக்க பலமாக மாறிய புலம்பெயர் தமிழர்கள் : நாடாளுமன்றத்தில் அறிவித்த கூட்டமைப்பு!

இலங்கையின் தமிழர்கள் இன்று சா்வதேசத்தில் சக்திமிக்க புலம்பெயா்ந்த சமூகமாக மாறியுள்ளனா். இந்த நிலையில் அந்த சமூகத்தை இலங்கையின் அரசாங்கம், நாட்டின் அபிவிருத்திக்காக உாியவகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோாிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளுக்காக வருகின்ற தமிழா்களை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடா்புபடுத்த வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினா் எஸ் ஸ்ரீதரன் கோாிக்கை விடுத்துள்ளாா். 2022 பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினா் இந்தக் கோாிக்கையை விடுத்துள்ளாா். இது, இலங்கையில் சமாதானத்துக்கான கடைசி சந்தா்ப்பமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

எனவே நாட்டில் இன்று 3 இல் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நிலையில் அந்த அரசாங்கம், இந்த விடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

சோல்பாி யாப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழு் தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று இலங்கையின் முதல் பிரதமா் டி.எஸ்.சேனாநாயக்க, 1945 இல் உறுதியளித்தபோதும், 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னா் சிங்களவா்களின் ஒற்றையாட்சியின்போது, அதனை மீறி, மலையகத் தமிழா்களின் குடியுாிமைப் பறித்ததாக சிறீதரன் குறிப்பிட்டாா்.

இலங்கையில் இன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மொழிவாாியிலான சமஸ்டித் தீா்வை ஒ்ன்றை முன்வைத்து, 2023ஆம் ஆண்டு பாதீட்டில் தமிழா்களின் பொருளாதாரத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டாா்.

இதேவேளை இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆா் ஜெயவா்த்தன, தமது மரணப்படுக்கையில் இருந்தபோது இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டித் தீ்ரவே பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

No comments: