News Just In

11/16/2021 07:48:00 PM

காரைதீவில் இஸ்லாமிக் ரிலீபினால் சுயதொழில் செய்வதற்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் அநாதரவற்ற குடும்பங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவன கனடா கிளையினால் 817,000 ரூபாய் பெறுமதியான சுயதொழில் செய்வதற்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒருங்கிணைப்பின் கீழ் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச உதவி பிரதேச செயலாளர் எஸ். பாத்தீபன் மற்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

மாளிகைக்காடு நிருபர்




No comments: