News Just In

11/15/2021 06:50:00 AM

மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், தரம் 5 புலமைப்பரீட்சை,க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர வினாத்தாள்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படும் என பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments: