மட்டக்களப்பு மாநகரசபைக்கு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்லே அப்ளிடன், உதவி தூதுவர் அன்ரூவ் ரவ்ளர் ஆகியோர் இன்று (15.10.2021) விஜயம் செய்தனர். இதன் போது பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
தற்போது அதிகரித்து செல்லும் பொருட்கள் விலையேற்றத்தால் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், இக் காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் அரசுடன் இணைந்துள்ள மட்டக்களப்பு அரசியல்வாதிகள் இருவரின் அரசியல் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் அவை உண்டுபண்ணியுள்ள அதிர்வலைகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தியில் "சிறுவர் சிநேக மாநகர" திட்டங்கள், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் இங்குள்ள கிராமங்களின் அபிவிருத்தியின் பொருட்டு கொக்குவில், சத்துருக்கொண்டான், ஊரணி போன்ற கிராமப்புறங்களில் பாரியளவான "சிறுவர் பூங்காக்கள்" அமைத்துத்தர வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களினால் தூதுவர்களிடம் முன்மொழிவு (proposal) ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
No comments: