சமகாலச் சூழ்நிலையில் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகபளில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவளத்துணை சார்ந்த அறிவும் விழிப்புணர்வும் அவசியமாகவுள்ளது என மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையைச் சேர்ந்தவரும் ஆசிரியர் தொழில் வாண்மைத்துவ நிலையத்தின் தலைமை நிர்வாகியுமான விரிவுரையாளர் ஏ. றியாஸ் எழுதியுள்ள “அன்புடன் உளவளத்துணை” எனும் நூல் வெளியீடு வெள்ளிக்கிழமை 12.11.2021 ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியால கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வைத்தியர்கள் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் துறைசார்ந்தோர் நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் “அன்புடன் உளவளத்துணை” நூல்பற்றி நூல் நயவுரையில் தெரிவித்த ஆசிரியர் கலாசாலை அதிபர் ஜுனைட் பாடசாலைகளில் வெற்றிகரமான ஆசிரியர்களாக செயலாற்றுவதற்கு உளவளத்துறை சார்ந்த அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் பல்வேறு உளவியல்புகளை விளங்கிக் கொண்டு அவர்கள் எதிரநோக்கும் உளவியல் சார்ந்த உளத் தாக்கங்களுக்கு தீர்வு காண வேண்டும் அதன் மூலமே வெற்றிகரமான கற்பித்தலை மேற்கொள்ள முடியும். சம காலத் தேவை கருதி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது கல்வித் துறை சார்ந்தோருக்கு மிக்க பயனளிக்கும்” என்றார்.
No comments: