News Just In

11/11/2021 06:52:00 PM

பாகிஸ்தானா? அவுஸ்திரேலியாவா? 2வது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டும்!

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெடடில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியுடன் துபாயில் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதிப் போட்டியை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.

1992 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை ஈட்டிய நியூஸிலாந்தை கடைசி குழுநிலைப் போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு பாகிஸ்தான் உலக சம்பியனாகியிருந்தது.

அதேபோன்று இம்முறை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டுவந்து அதிசயம் ஒன்றை அவுஸ்திரேலியா நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: