News Just In

10/27/2021 06:05:00 PM

அரசாங்கத்தை சாடும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலில் பாதிக்கப்பட்ட வத்தளை - பமுனுகம சரக்குவ கடற்கரையோர கண்காணிப்புக்காக, பாகியன்கல ஆனந்த தேரருடன் நேற்று (26) சென்றிருந்தபோது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தயவுசெய்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றில் வழக்கைத் தாக்கல் செய்து, இந்த நிறுவனங்களிடமிருந்து அபராதத்தை அறவிடுமாறு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் தாம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.இது இந்த நாட்டு மக்களின் உரிமையாகும்.அது தரகர்களின் உரிமையல்ல.

இந்த அரசாங்கம் மக்களுக்கு செவிசாய்ப்பதில்லை. அத்துடன், மக்களுடன் இருப்பதாகவும் வாக்குறுதியளித்தது.ஆனால், அதனை நிறைவேற்றியதா? என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: