News Just In

10/21/2021 09:42:00 AM

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்1 9 தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பம் (மட்டக்களப்பு அப்துல் லத்தீப்)

               

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதாரத் திணைக் களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்1 9 தடுப்பூசிகள் ஏற்றும் பணிகளை 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இன்று (21)முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்றய தினம் ஆண்டு தரம்13 வகுப்பு மாணவர்கள் காலை 9 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரையும் தரம் 1 தொடக்கம் 4வரை வகுப்பு மாணவர்கள் முற்பகல் 10.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவிக்கின்றது.

இதன்படி மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கும் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களுக்கும் இந்த தடுப்பூசி மற்றும்பணிகள் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெறும் என்றும் கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலய மாணவர்களுக்கும் கல்லடி விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்குமான தடுப்பூசி ஏற்றும் பணிகள் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்திலும் நடைபெறும் என்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவிக்கின்றது.

இதேவேளை இன்றைய தினம் பாலமீன்மடு. திராய்மடு, புளியந்தீவு, புளியந்தீவு மேற்கு, புளியந்தீவு கிழக்கு கிராம சேவை உத்தியோகத் தர்கள் பிரிவுகளில் 20 வயது இளைஞர் யுவதிகள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகளும் இன்று காலை எட்டரை மணி முதல் நடைபெற இருப் பதாக சுகாதாரத் திணைக்களம் அறிவிக்கின்றது.

இதன்படி பாலமீன்மடு திராய்மடு கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் திராய்மடு தமிழ் வித்தியாலயத்திலும் இதற்கு மேலாக புளியந்தீவு மேற்கு, புளியந்தீவு கிழக்கு புளியந்தீவு மத்தி , புளியந்தீவுதெற்குஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையிலும் காலையில் எட்டரை மணி முதல் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவிக்கின்றது.



No comments: