எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாத கொவிட் திரிபொன்று உலகளாவிய ரீதியில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
'மூ' என அழைக்கப்படும் இந்த கொவிட் திரிபு, கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொவிட் திரிபை இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும், இது மிக விரைவில் பரவக் கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முறையாக சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இந்த தொற்று பரவுவதை தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: