News Just In

8/02/2021 03:30:00 PM

மட்டக்களப்பு கலைஞர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த மூன்று குறுந்திரைப்படங்களின் வெளியீட்டு விழா...!!


“முறையற்ற புலம் பெயர்வை கட்டுப்படுத்துதல்" எனும் வேலை திட்டத்தின் கீழ் ஓர் அங்கமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மூன்று குறுந்திரைப்படங்களின் உத்தியோக பூர்வ வெளியீட்டு விழா நேற்று முந்தினம் மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

லி(f)ட் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த குறுந்திரைப்படங்கள் முறையற்ற வகையில் நாட்டை விட்டுச்செல்வோர் மற்றும் செல்ல நினைப்போர் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் லி(f)ட் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரனின் தலைமையின் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள், கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவநீதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்கோர் அமைப்பின் நிதியுதவியுடன் லி(f)ட் அமைப்பின் திரைப்பட பிரிவினால் மட்டக்களப்பு கலைஞர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த மூன்று குறுந்திரைப்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தலைசிறந்த இயக்குனர்களில் ஓருவராக திகழும் மட்டக்களப்பைச் சேர்ந்த கே.கோடீஸ்வரனின் இயக்கத்திலும் விஸ்ணுஜனின் ஒளிப்பதிவிலும் மட்டக்களப்பு கலைஞர்களின் பங்களிப்புடனும் இந்த குறுந்திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு தொழிலுக்காக சட்ட ரீதியற்ற முறையில் வெளிநாடு செல்ல முற்படும்போது அவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள், அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இந்த நாட்டிலும் வாழமுடியும் என்பதை இவ்வாறான புலம்பெயர்தலை தடுக்கும் என்பதையும் மூன்று குறுந்திரைப்படங்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டதுடன் திரைப்படத்திற்கு பங்களிப்பு செய்த கலைஞர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் குறுந்திரைப்படங்களை இயக்கியவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இயக்குனர் கோடீஸ்வரன் லி(f)ட் அமைப்பினால் “குறுந்திரைப்பட செம்மல்” என்னும் விருது வழங்கி கெரளவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













































No comments: