News Just In

8/01/2021 03:24:00 PM

மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 105 ஆவது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு...!!


காணொளி- https://youtu.be/WIJ1eKGIeZo
மட்டக்களப்பு மாவட்ட பாதுகாவலர் புனித இஞ்ஞாசியார் ஆலய 105 ஆவது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 105 ஆவது வருடாந்த திருவிழா இன்று (01) கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.

இவ்வாலயத்தின் 105 ஆவது வருடாந்த திருவிழாவானது கடந்த 23.07.2021 திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அட்களார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து ஒன்பது நவநாட் காலங்களில் 5.00 மணிக்கு திருச்செபமாலையும், பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

கடந்த 31.07.2021 சனிக்கிழமை புனிதரின் பெயர் கொண்ட திருவிழாவான தினத்தில் மூன்று திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு, மாலை 6.30 மணிக்கு நற்கருனை ஆராதனையும் புனிதரின் ஆசீரும் இடம் பெற்றது.

கொவிட் 19 சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடை பெற்ற இத்திருவிழாவில் புனிதரின் திருவுருவப்பவனி இம்முறை இடம்பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து இன்று 2021.08.01 ஆந் திகதி காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியானது மறை மாவட்ட இயேசு சபை மேலாளர் அருட்தந்தை வின்சன்ட் ரொசைரோ அடிகளார், அருட்தந்தையர்களான லோரன்ஸ் லோகநாதன், யோன் ஜோசப் மேரி, மகிமைதாசன், கிறைட்டன் அவுஸ்கோன் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

அருட்சகேதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் துறவிகள், பொது நிலையினரென குறிப்பிட்டளவிலானோர் கலந்துகொண்ட திருவிழாவானது கொடியிறக்கப்பட்டு, புனிதரின் ஆசிரைத் தொடர்ந்து 105 ஆவது ஆண்டு திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.











No comments: