News Just In

7/09/2021 05:35:00 PM

கிழக்கு மாகாணம் உறுதியான நிலைத்து நிற்கும் விவசாய கலாச்சாரத்தை நோக்கி மாற்றம் பெறவேண்டும்- கிழக்கு மாகாண ஆளுநர்!!


காணொளி- https://youtu.be/GJh1H_RRhuY
கிழக்கு மாகாணம் உறுதியானதும் நிலைத்து நிற்க் கூடியதுமான விவசாய கலாச்சாரத்தை நோக்கி மாற்றம் பெறவேண்டும் அது ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமென கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி மண்டபத்தில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உறுதியான நிலைத்து நிற்கும் விவசாய கலாச்சாரத்தை செயற்படுத்துவது தொடர்பாக மூன்று மாவட்டங்களையும் சார்ந்த அரச திணைக்களங்களினதும் கூட்டுத்தாபனங்களினதும் உயரதிகாரிகளுக்கான அறிவூட்டல் கருத்தரங்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஸித்த பி வணிக சங்கவின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களின் அரச அதிபர்கள் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் தொடர்ந்து பேசுகையில், விவசாயம் இந்த நாட்டின் உயிர் நாடி. அது, உண்ண உணவைத் தருவதோடு பொருளாதாரவளத்தையும் பெருக்குகின்றது. நமது நாட்டின் சனத்தொகையில் 35% விகிதத்தினர் அதில் ஈடுபட்டுள்ளனர். இவ்விசாயத்திற்கென ஒரு கலாச்சாரம் உண்டு விவசாயம் தங்கியிருக்கும் நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இரசாயனம் கலந்த உரங்களினாலும், கிருமி நாசினிகளாலும் நமது விவாயன நிலங்கள் அதன் செழுமையை இழந்து வருவதோடு அவைகளை உபயோகித்து உற்பத்தியாக்கும் விளைபொருள்களிலும் அவைகள் கலந்து நிற்கின்றன.

இதனை உணவாக உட்கொள்ளும்போது உடலில் பாரிய நோயும், பிணியும் தோன்றுகின்றன. இதனாலேயே எமது நாட்டின் ஜனாதிபதி சேதனப்பசளையையும், கூட்டுப் பசளையையும் விவசாயத்திற்கு பாவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இது இந்த நாட்டின் கொள்கை. இனிமேல், இந்த நாட்டில் இரசாயனப்பசளை பாவனையில் இருக்காது அது அரசினால் தடைசெய்யப்பட்டுவிட்டது.

ஆதலால், விவசாயிகள், நமது இயற்கை சேதனங்களான மாட்டெரு, ஆட்டெரு, கோழிக் கூளம், இலைக்கழிவுகள் என்பவைகளைக்கொண்டு விசாயச் செய்கையில் ஈடுபடும் வழக்கத்தை ஒரு கலாச்சாரமாக்கிக் கொள்ள வேண்டும். காலப்போக்கில் தங்களுக்குத் தேவையான உரங்களை தாங்களே தயாரிக்க பழகிக் கொள்ள வேண்டும். நாட்டில் பொருளாதார அபிவிருத்தி, போதிய விளைச்சல், நோயற்ற வாழ்வு என்பன இதனால், நிலைத்து நிற்கும் அதிகாரிகள் இதனை மக்களின் காலடிக்கு கொண்டு சென்று அவர்களை ஊக்கவிக்க வேண்டும் என்றார்.






No comments: