News Just In

7/20/2021 01:33:00 PM

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகஸ்தர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு...!!


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமக்கான நிரந்தர நியமனத்தினை இதுவரை வழங்காமைக்கு எதிராக இன்று(20) 12மணிக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனை முன்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

தங்களது சம்பள உயர்வு, நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்குள் தம்மை உள்வாங்கியுள்ளதாக அறிகின்ற போதும் அது தங்களுக்கு சாத்தியமற்றது என்றும் கடந்த நான்கு வருடங்களாக குறித்த டெங்கு கட்டுப்பாட்டு பணியினை முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறித்த கோரிக்கைகளுக்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகஸ்தர்கள் எங்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும் அரசே!, நுளம்பு கட்டுப்பாட்டு கள உத்தியோகஸ்தர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் அநியாய செய்ய வேண்டாம், நுளம்பு கள உதவியாளர்கள் உரிமைகளை மீற வேண்டாம், அரசே நுளம்பு கள உத்தியோகஸ்தர்களை சுகாதார திணைக்களத்திற்குள் உள்வாங்கு, அரசே மாகாண சபைக்குள் உள்ளடக்கி எங்களை 180 நாள் வேலைத்திட்டத்திற்குள் உள்ளடக்கு போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




















No comments: