News Just In

7/01/2021 12:43:00 PM

காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக முச்சக்கர வண்டி விபத்து- முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம்!


(நூருல் ஹுதா உமர்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து நடைபெற்ற இடத்துக்கு அண்மையில் கடந்த வாரம் செங்கற்களை ஏற்றிவந்த லொறியொன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: