News Just In

7/13/2021 08:48:00 AM

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் போலியானது- இலங்கை மத்திய வங்கி...!!


வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் போலியானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் டப்ளிவ். டீ.லக்ஷ்மண் இதனைத் தெரிவித்துள்ளார்.
வணிக வங்கிகள் வலுவான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வங்கிகள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொள்கை வட்டி விகிதங்களை நிலையானதாக வைக்க மத்திய வங்கி அண்மையில் தீர்மானித்திருந்தது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வளர்ச்சியை விட நாட்டின் பொருளாதாரம் அதிக வளர்ச்சியை காட்டியிருந்தாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செயல்முறை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் கொவிட்-19 அலையினால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கம் குறைவடையக் கூடும் என மத்திய வங்கி எதிர்பார்பு வெளியிட்டுள்ளது.

No comments: