News Just In

7/25/2021 09:20:00 AM

மட்டக்களப்பு- வாகரை பிரதேச மாணவர்களுக்கு உதவி...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு- வாகரை பிரதேசத்தின் மதுரங்கேணிக்குளம், கிருமிச்சை, கொக்குவில் கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.

குறித்த பிரதேச மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக தமது கல்வி நடவடிக்கைகளை இணையவழி, தொலைத் தொடர்பு வசதிகளினூடாக முன்கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்ட இராணுவத்தினர் மற்றும் மட்டக்களப்பு பாடும் மீன் 306 சீ-2, லயன்ஸ் கழகத்தினர் ஆகியோர் இணைந்து கணினி மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட இலத்திரனியல் ஊடக சாதனங்களை அன்பளிப்பு செய்தனர்.

அத்துடன், இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கடந்தகால வினா-விடை பத்திரம் மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இம் மனிதாபிமான பணிகளுக்காக பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு குறித்த பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதிலும் கல்வி மற்றும் சமூகப் பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு மனிதாபிமானப் பணிகளை தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் ஆலோசனைக்கு அமைவாக
23 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நலீன் கொஸ்வத்த வின் வழிகாட்டலில் வாகரை 233 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஹேவகே தலைமையில் பல் வேறு மக்கள் நல மனிதாபிமான பணிகள் முன்னொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments: