News Just In

7/10/2021 06:03:00 PM

மட்டக்களப்பில் வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு...!!


வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(10) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நாடாளாவிய ரீதியில் இன்று (10) ஆந் திகதி காலை 10 மணிக்கு தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான அங்குரார்ப்பன நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் திருமதி.பிறேமினி ரவிராஜ் தலைமையில் இலுப்பட்டிச்சேனை மாரியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அரசாங்க அதிபர் கே.கருணாகரன், எறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின்
உதவிப் பிராந்தியமுகாமையாளர் கே.ரவிச்சந்திரன், கிராம உத்தியோகத்தர் எஸ்.துரைரெட்ணம் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அதிதிகளின் உரையைத் தொடர்ந்து, 50 பயனாளிகலுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிற்செய்கை சபையின் உத்தியோகத்தர்களினால் ஆலய வளாகத்தில் தென்னை நடுகை முறை சம்மந்தமான பயிற்சி வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments: