News Just In

7/09/2021 07:08:00 PM

மட்டக்களப்பு மாநகரசபையால் "மண் இல்லா மாநகரம்" திட்டத்தின் கீழ் புளியந்தீவு 18ம் வட்டார வீதி கிரவல் வீதியாக செப்பனிடப்பட்டது...!!


மட்டக்களப்பு மாநகரசபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மண் இல்லா மாநகரம்’ எனும் தொனிப்பொருளில் மணல் வீதிகளாகவும், மக்கள் பாவனைக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள வீதிகளைக் கிரவலிட்டு செப்பனிடும் செயற்திட்டமானது இன்றைய தினம் புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் முன்மொழிவு மற்றும் முயற்சியின் அடிப்படையில் மாநகர முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கு அமைய மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

புளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்திற்குட்பட்ட மாணிக்க சதுக்கம் உள்ளக வீதியானது மக்களின் வேண்டுகேளுக்கிணங்க மாநகரசபை உறுப்பினரின் பரிந்துரையின் கீழ் கிரவல் இட்டு செப்பனிடும் பணிகள் மாநகர ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளின் மூலம் செப்பனிடப்படுகின்றது.

மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தினை வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், மாநகரசபை உறுப்பினரும், வேலைக்குழுவின் தலைவருமான எஸ்.ஜெயந்திரகுமார், மாநகரசபை உறுப்பினர்களான ச.கமலரூபன், திருமதி எஸ்.கிறிஸ்டினா ஆகியோர் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












No comments: