News Just In

6/23/2021 04:55:00 PM

திருகோணமலை பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்...!!


மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று(23) இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலையை உடன் குறை, வேண்டாம் நாடகம் எரிபொருட்களின் விலையை குறைத்து கொடு, மக்கள் சட்டியிலிருந்து நெருப்புக்குள் நிவாரணம் செய் பொருட்களின் விலையை குறைத்து கொடு, என்ன நடந்தது 20 கோடி எரிபொருள் விலை நிர்ணய நிதிக்கு சொல்லாதே சாட்டு பொருட்களின் விலைகளை குறைத்துக் கொடு போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


No comments: