News Just In

6/23/2021 03:36:00 PM

பாடசாலை மாணவர்களுக்கு இலகு தவணை கொடுப்பனவு அடிப்படையில் கைப்பேசி...!!


இலங்கையில் பின்தங்கிய மற்றும் குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணையவழியாக கல்வியைத் தொடர, இலகு தவணை கொடுப்பனவு அடிப்படையில் கைப்பேசிகளை கொள்வனவு செய்யக்கூடிய முறைமையொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போது, அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments: