News Just In

6/25/2021 06:51:00 PM

மட்டக்களப்பு- செங்கலடியில் இராணுவ வாகனம் வீதியை விட்டு விலகி ரோடையில் வீழ்ந்து விபத்து- இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்...!!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு- செங்கலடி கறுப்பு பாலத்தில் இராணுவ வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்கு கீழே நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி பயணித்த இராணுவ டிரக் வண்டி இன்று (25) பிற்பகல் 4 மணிக்கு கறுப்பு பாலத்திற்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை மீறி பாலத்திற்கு கீழ் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த இரு இராணுவத்தினர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
























No comments: