News Just In

6/01/2021 11:01:00 PM

மட்டக்களப்பில் இன்று மாத்திரம் 84பேருக்கு கொரோனா தொற்று; 03பேர் உயிரிழப்பு- மக்களுக்கு விசேட எச்சரிக்கை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(1) மாத்திரம் 84பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்துடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில்,
மட்டக்களப்பு பிரதேசம்:- 20பேர்
களுவாஞ்சிக்குடி பிரதேசம்:- 02பேர்
வாழைச்சேனை பிரதேசம்:- 02பேர்
காத்தான்குடி பிரதேசம்:- 15பேர்
கோறளைப்பற்று மத்தி:- 07பேர்
செங்கலடி பிரதேசம்:- 07பேர்
ஏறாவூர் பிரதேசம்:- 08பேர்
கிரான் பிரதேசம்:- 03பேர்
ஓட்டமாவடி பிரதேசம்:- 04பேர்
ஆரையம்பதி பிரதேசம்:- 01பேர்
பட்டிருப்பு பிரதேசம்:- 04 பேர்
வவுணதீவு பிரதேசம்:- 04 பேர்
பொலிஸ் அதிகாரிகள் 03 பேர் மற்றும் சிறைச்சாலையில் 06பேர் உட்பட இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 22 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக அண்மைக்காலங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொது மக்கள் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளில் இருந்து வெளி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, முகக்கவசங்களை முறையாக அணிந்து ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுக்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொது மக்களை அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: