News Just In

6/02/2021 12:01:00 PM

மட்டக்களப்பில் கடந்த 7 நாட்களில் 786பேருக்கு கொரோனா தொற்று; இன்று முதல் சின்ன ஊறணி பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க பரிந்துரை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 68 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (01) புதன்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும், பொலிசார் 03 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 06 பேர் உட்பட மொத்தமாக 68 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையில் மொத்தமாக 1807 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2790 கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

1708 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். தொடர்ந்தும் 951 பேர் சிகிட்சை பெற்றுவருகின்றனர். கடந்த 7 நாட்களில் 786 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 
அதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் சின்ன ஊறணி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்றிலிருந்து விடுவிப்பதற்கான பரிந்துரை சுகாதாரப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

No comments: