News Just In

6/02/2021 07:48:00 AM

இலங்கையில் 1500ஐக் கடந்த கொரோனா மரணங்கள்- நேற்று மாத்திரம் 43பேர் உயிரிழப்பு...!!

இலங்கையில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்த மரணங்கள் கடந்த மே 20ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதிவரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 31 ஆண்களும் 12 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது.

இதன்படி, மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 527ஆகப் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



No comments: