திருக்கோவில் பிரதேச வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிசாருக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கொரோனா தொற்றாளர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிகமாக பொலிஸ் நிலையத்த பூட்டி கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: