News Just In

6/25/2021 07:41:00 AM

உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...!!


உடன் அமுலுக்குவரும் வகையில் நாட்டின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு கிரேன்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலங்கபொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் மதுகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடதொல கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட Abeythanna தோட்டம் – Clay பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் pier மேற்கு மற்றும் தலைமன்னார் pier கிழக்கு ஆகிய கிராம கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரனாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் Noragalla தோட்டம் மேற்பிரிவு, பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டம் இலக்கம் ஒன்று மற்றும் இலக்கம் ஐந்து ஆகிய பிரிவுகள், Kapuhentota கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல தோட்டம் இலக்கம் ஐந்து பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் கிரேண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 233 ஆம் இலக்கத் தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் ஆயிரத்து 941 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய ஆயிரத்து 917 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 24 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 825 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் 45 உயிரிழப்புகள் நேற்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 32 ஆயிரத்து 456 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: