News Just In

5/29/2021 06:56:00 PM

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கோவிட் தொற்று உறுதி!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரலவிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது கந்தளாய் பிரதேசத்தில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக கொழும்பிலுளள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை அவருடைய பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அத்தோடு தன்னோடு தொடர்புகளை பேணியோரும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

புத்தாண்டு கொவிட் அலை ஆரம்பமான பின்னர் கோவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள 5வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

No comments: