News Just In

5/16/2021 06:47:00 PM

மட்டக்களப்பு மக்களை கொவிட் தொற்றிலிருந்து மீட்க இராணுவத்தினரும் மாநகர சபையும் இணைந்து கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!


நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் மூன்றாவது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணி தொடக்கம் நாளை திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணி வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு நகர் பகுதியில் கிருமி தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாளை மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு பிரதான சந்தை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், காந்தி பூங்கா மற்றும் பிரதான வீதிகளில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இத்தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர சபையினர், கிழக்கின் சிறகுகள் அமைப்பினர், இராணுவத்தினர் மற்றும் சுகாதார துறையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

231வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி, மாநகர ஆணையாளர் எம்.தயாபரன், பொதுச் சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், தீயணைப்பு படை பொறுப்திகாரி வி.பிரதீபன் உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.










No comments: